Skip to main content

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-ம் மொழிப்பாட விவகாரம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-ம் மொழிப்பாட விவகாரம்: மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்றது உச்சநீதிமன்றம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3ஆம் மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு நடத்தப்படாது என்ற மத்திய அரசின் உறுதிமொழியை
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
3ஆம் மொழிப்பாடமாக ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழியை கற்கலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 

கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் விருப்பப்பாடமாக ஜெர்மன் மொழி தேர்வை எழுதிக் கொள்ளலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஜெர்மன் அல்லது வேறு மொழியை இனி விருப்பப்பாடமாக கற்கலாம் என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழிதேர்வை அடுத்த ஆண்டு முதல் எழுதிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி