Skip to main content

பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு என்எல்சியில் தொழிற்பயிற்சி


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுநர் சட்டம் 1961ன் விதிகளுக்குட்பட்டு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் தொழிற்பயிற்
சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி விவரங்கள் வருமாறு:
1. டெக்னிக்கல் அப்ரன்டிஸ் பயிற்சி:
காலியிடங்கள்:
மெக்கானிக்கல் - 70
எலக்ட்ரிக்கல் - 60
சிவில் - 20
இன்ஸ்ட்ருமென்டேசன் - 10
கெமிக்கல் - 10
மைனிங் - 10
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் - 10
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 10
கமர்ஷியல் பிராக்டிஸ் - 10

பயிற்சி காலம்: ஒரு வருடம்.
உதவித் தொகை: மாதம் ரூ.2,530.
தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டியினர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 31.01.2012க்கு பின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் (வொகேஷனல்) அப்ரன்டிஸ் பயிற்சி
காலியிடங்கள்:
குழந்தை கவனிப்பு மற்றும் சத்துணவு - 5.
பல் மருத்துவம் - 5
பல் டெக்னீசியன் - 2
இசிஜி ஆடியோ மெட்ரிக் டெக்னீசியன் - 5
ஹெல்த் வொர்க்கர் - 15
மருத்துவ ஆவண உதவியாளர் - 10
மருத்துவமனை பராமரிப்பு - 25
பல்நோக்கு பணியாளர் - 15
கண் நோய் டெக்னீசியன் - 4
பார்மசிஸ்ட் - 10
பிசியோதெரபி - 9
31.01.2012 தேதிக்கு பின்னர் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடத்துக்குமேல் பணி செய்ய அனுபவம் இருக்கக் கூடாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை பொது மேலாளர்,பணியாளர் மேம்பாட்டு மையம்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,வட்டம்-20, நெய்வேலி - 607803.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.01.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள்