Skip to main content

அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு


தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக  நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது. இதுபோல் 10
ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல்  பொது வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த வகுப்பினருக்கும் இன்றுடன் தேர்வுகள் நிறைவு  பெறுகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.

விடுமுறைக்குப் பின்னர் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பல தனியார் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படுகின்றன. சில தனியார் பள்ளிகள் ஜனவரி  5ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளன. அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் 3ம் பருவத்திற்குரிய பாட  புத்தகங்கள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2