Skip to main content

மதுரை காமராஜ் பல்கலை நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பருவமுறை (சி.பி.சி.எஸ்.,) நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள, நேர்முக உதவியாளர்,
உதவியாளர், கணினி இயக்குபவர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு: சென்னை உயர் நீதிமன்ற பணிகளில் காலியாக உள்ள, நீதிபதி நேர்முக உதவியாளர் 57; நேர்முக உதவியாளர் 7; உதவியாளர் 37; கணினி இயக்குபவர் 28 மற்றும் தட்டச்சர் 139 என, 268 பணியிடங்களுக்கு, கடந்த பிப்., 23ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. இத்தேர்வில், 27,983 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில், நீதிபதி நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கான, திறனறி தேர்வுக்கு, ஒரு பதவிக்கு, 20 பேர் என்ற விகித அடிப்படையில், 3,631 பேர் அனுமதிக்கப் பட்டனர். இதில், நீதிபதி நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட, 221 விண்ணப்பதாரர் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் ஜன., 5ம் தேதியும், நேர்காணல், ஜன., 6, 7 மற்றும் 8ம் தேதிகளிலும், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல், பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு, கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்