Skip to main content

ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள்.


ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள்:

* தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து
பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக் கொள்ளப்படும். (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்அதை ஓய்வுபெறும்பொழுது ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால்ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365நாட்கள்.இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்றகணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

* ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.்

* அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல்சேருபவை எந்தவிதத்திலும்பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால்அனுபவிக்காதபணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும். 90 நாட்களுக்குள்கணக்கில் சேர்க்கப்படவேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்தஅதே தேதியில் தான்ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம்குறிக்க எளிமையாகஅமையவும் ஒரே தேதியில்ஆண்டுதோறும்அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.எவ்வாறாயினும்ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்அடுத்தஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில்ஓராண்டு / 30 நாட்கள்ஒப்படைப்பெனில்இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

* ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும்தேதியோ, ECS ஆகும்தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்படவேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும்பின்னர் முன்தேதியிட்டு DAஉயர்த்தப்படும்போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும்இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும்நிலுவைக் கணக்கீட்டுக்காலத்தில்ஒப்படைப்பு தேதி வந்தால்சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம்மற்றும்அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.