Skip to main content

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை, நேரில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை, வரும் ஜன., 10ம் தேதி நடத்துகிறது. இம்மாதம் 10ம் தேதி
முதல் இதற்கான விண்ணப்பம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், மையம் அமைத்து 50 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.திருப்பூர் முதன்மை கல்வி அலுவலக மையத்தில், இதுவரை2,973 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. முதல் கட்டமாக வந்த 1,600 விண்ணப்பங்கள் விற்று தீர்ந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 2,400 விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பில் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை, ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு எழுத விரும்புவோர், விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்கலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தபாலில் அனுப்பக்கூடாது; வாங்கிய மையத்திலேயே, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும், அதற்கான ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும், விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நேற்று வரை, மொத்தம் 293 பேர் விண்ணப்பங்களை இம்மையத்தில் அளித்துள்ளனர். வரும் 26ம் தேதி மாலை5.00 மணி வரை, இங்கு விண்ணப்பம் பெறப்படும்.அனைத்து விண்ணப்பங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பிய பின், அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஜன., முதல் வாரத்திலோ, எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா