Skip to main content

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "ஆகாஷ்' ஏவுகணை, ஒடிஸா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் எம்.வி.கே.வி.பிரசாத் கூறுகையில்,
"இது விமானப் படையினரின் வழக்கமான சோதனைகளில் ஒன்று. இதுபோன்று மேலும் சில ஏவுகணைகள் இந்த வாரத்தில் சோதிக்கப்பட உள்ளன' என்றார்.

ஆகாஷ் ஏவுகணை, நிலத்தில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் நடுத்தர வகையைச் சேர்ந்ததாகும். இது, 60 கிலோ எடை கொண்ட வெடிபொருள்களுடன் 25 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டதாகும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை ஏற்கெனவே விமானப் படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. தரைப்படைக்கான ஏவுகணை வடிவமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்