Skip to main content

பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி

நாடு முழுவதும், 45 மத்திய பல்கலை; 318 மாநில அரசு பல்கலைகள்; 185 தனியார் பல்கலைகள்; 129 நிகர்நிலை பல்கலைகள்உள்ளன. இவை தவிர, கல்லூரிகள், என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.,க்கள் என பல்வேறு கல்வி நிறுவனங்கள்
உள்ளன.
பல்கலைகளில், புதிய பாடப்பிரிவு துவக்கம், அங்கீகாரம் பெறுதல், ஆசிரியர் நியமனத்திற்கு யு.ஜி.சி., அனுமதி அவசியம். யு.ஜி.சி., நிதிஉதவிடன் செயல்படும், அனைத்து, மத்திய, மாநில பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., தலைவர் வேத பிரகாஷ் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும், பல்வேறு பல்கலைகளில், பல்வேறு பாடங்களில், ஆசிரியர்காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. அந்த வகுப்புகளை கவனிக்க, பகுதிநேர, ஒப்பந்த, தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். பல்கலைகளில் தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவர்களை, விளம்பரங்கள், பல்கலை இணையதளங்கள், கல்வியாளர்கள் பரிந்துரையின் பேரிலும் நியமிக்கலாம். காலிப்பணியிடங்களை, அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் நிரப்ப வேண்டும். அதில், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இப்பிரச்னையில், பல்கலையின் பொது வளர்ச்சி நிதியை யு.ஜி.சி., நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படாது என நம்புகிறேன். இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி