Skip to main content

ஒயிட் ஸ்பேஸ் மூலம் இலவச இணைய இணைப்பு

நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை நிறைவேற்றுவதில் பல தொழில் நுட்ப நிறுவனங்கள் முனைப்புடன் பல திட்டங்களை வடிவமைத்து செயல்பட உள்ளன. இந்த வழியில்,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மோடி அவர்களின், IT + IT = IT ( இந்தியர்களின் திறமை + தகவல் தொழில் நுட்பம் + நாளைய இந்தியா (“Indian Talent” plus “Information Technology” equals ” India Tomorrow”) என்ற இலக்கினை அடைய, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திட்டம் நிச்சயம் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பொதுத் துறை நிறுவனமான தூரதர்ஷன் மற்றும் இந்திய அரசு ஆகிய இரண்டும் பயன்படுத்தும் அலைக் கற்றை அலை வரிசையில், முழுமையான திறன் பயன்படுத்தப்படவில்லை. இவை பயன்படுத்தும் அலைவரிசையினை “ஒயிட் ஸ்பேஸ்” என அழைக்கின்றனர். மைக்ரோசாப்ட் இதனைப் பயன்படுத்தி, தொலை தூரக் கிராமப்புறங்களில், இறுதி வீடு வரை இணைய இணைப்பினை வழங்கலாம் என்று திட்டம் தந்துள்ளது. 
வழக்கமான வை பி அலைவரிசை 100 மீட்டர் தொலைவிற்கே இயங்க முடியும். ஆனால், அரசு மற்றும் தூரதர்ஷன் தன் ஒளிபரப்பிற்காகப் பயன்படுத்தும் 200 - 300 Mhz ஸ்பெக்ட்ரம் ஒயிட்ஸ்பேஸ் அலைவரிசை, 10 கி.மீ தூரம் வரைச் சிறப்பாகச் செயல்படும். இதில் உள்ள பயன்படுத்தாத அலைவரிசைத் திறனை மைக்ரோசாப்ட் பயன்படுத்த திட்டமிடுகிறது. இதனைப் பயன்படுத்துவதை, தகவல் தொழில் நுட்பவியலில் ”White Space” தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி தரப்படும் இணைய வேகத்தில் தகவல் பரிமாற்றத்தின் வேகம் 16Mbps இருக்கும். இது தற்போது சராசரியாக, அதிக பட்சமாகத் தரப்படும் 2 Mbps வேகத்தைக் காட்டிலும் எட்டு மடங்கு கூடுதல் ஆகும். இத்தகைய ஒயிட் ஸ்பேஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வை பி இணைப்பு தரும் பழக்கம், அமெரிக்காவில் சோதிக்கப்பட்டு, தற்போது வெற்றி கரமாக சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தியாவைப் பொறுத்த வரை 20 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது பெரிய தொகையாகத் தெரிந்தாலும், இந்திய ஜனத்தொகை எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இது மிகவும் குறைவுதான். எனவே தான், பிரதமர் அவர்களும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் அனைவருக்கும் இணையம் என்ற இலக்கினை அடையப் பாடுபடுகின்றனர்.
பிரதமர் மோடி அவர்களின் ”எல்லை இறுதி கிராமம் வரை இணையம் தரப்பட வேண்டும்; அப்போதுதான் இந்தியா முழுமையான டிஜிட்டல் இந்தியாவாக மாறும்” என்ற கனவு இந்த ஒயிட் ஸ்பேஸ் தொழில் நுட்ப இணைப்பு மூலம் சாத்தியமாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு