Skip to main content

அரசு பள்ளி காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு அதிகரிப்பு




அரசு பள்ளிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்களாக அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இரவு காவலர்கள், கோடை விடுமுறையிலும் பணியாற்றி
வருகின்றனர்.

அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்குவது போல, 17 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.பள்ளித் தளவாட பொருட்களின் பாதுகாப்பு கருதி, காவலர்களும் விடுமுறை காலங்களில் முழு நேர பணியில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களையும் விடுமுறையற்ற பணியாளராக கருதி, அந்நாட்களையும் ஈட்டிய விடுப்பாக கணக்கிட வேண்டும். தற்போது ஓராண்டுக்கு வழங்கப்படும் 17 நாட்கள் ஈட்டிய விடுப்பை, 30 நாட்களாக உயர்த்தும்படி, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கடந்த சட்டசபை மானிய கோரிக்கையின் போது அறிவுறுத்தப்பட்டது.அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வி முதன்மை செயலர் சபிதா அனுப்பியுள்ள உத்தரவில், "அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் காவலர்கள், விடுமுறையற்ற பணியாளர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்களாக உயர்த்தி அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உரிய திருத்தங்கள், அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் தனியாக வெளியிடப்படும், என உள்ளது 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி