Skip to main content

வாட்ஸ்ஆப்-யை வீழ்த்திய டெலிகிராம் மென்பொருள்

முகநூலுக்கு அடுத்த படியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளின் அதிவேக வளர்ச்சியை கண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கியது. இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளை
வீழ்த்த டெலிகிராம் என்ற புதிய மென்பொருள் சந்தைக்கு வந்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் இருக்கும் பயன்களைவிட இதில் அதிகம் உள்ளது. மேலும் பாதுகாப்பு வசதிகளும் இதில் அதிகம் காணப்படுகின்றது.

வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் வருடம் மட்டுமே இலவசம். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் இந்த மென்பொருளை உபயோகப் படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருளை லைஃப்லாங் முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருளில் அனுப்பபட்ட தகவல்களை அனுப்பியவர் அழித்தால், அனுப்பப்பட்டவரின் மொபைல் போனில் அப்படியே இருக்கும். ஆனால் டெலிகிராமில் ஒருவர் அழித்த செய்தி, மற்றொருவர் மொபைலிலும் அதே நேரத்தில் அழிந்துவிடும். இதனால் தவறாக அனுப்பப்பட்ட செய்தியை அவர்கள் பார்பதற்கு முன்னரே அழித்துவிடலாம்.
வாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 200 நபர்களுக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும் தான் அனுப்பமுடியும். ஆனால் டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர கணினியில் நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கணினியில் விண்டோஸ், மேக் இயங்குதளங்களில் நேரடியாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருள் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-யை வாங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் பின்வாங்கிகொண்டது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் உங்களுடைய புகைப்படங்களை உங்கள் விருப்பம் இல்லாமல் வேறு யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாகப்பட்டுள்ளது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக் ஆகிய மூன்று மொழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்பொழுது சொல்லுங்கள் வாட்ஸ்ஆப்-யை விட டெலிகிராம் மென்பொருள் சிறந்தது தானே. இன்றே இதை டவுன்லோட் செய்து பாதுகாப்பாக சாட்டிங் செய்யுங்கள்.
இதை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள்:
android - https://play.google.com/store/apps/details…
iphone/ipad - https://itunes.apple.com/us/app/telegram-hd/id898228810
windows mobiles - http://www.windowsphone.com/…/945b96a7-aadc-4dd0-806a-c2d1e…
website version - (இணைய தளம் மூலம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்) - http://zhukov.github.io/webogram/
mac os x - https://itunes.apple.com/…/messenger-for-telegr…/id747648890
pc mac/windows/linux - https://tdesktop.com/

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்