Skip to main content

உயர்கல்வி படிக்கும் ஆசிரியருக்கு நிபந்தனை


              "எம்.பில்., - பி.எச்.டி., பயிலும் ஆசிரியர்களால், பள்ளிகளில் கற்பித்தல் பணி சிறிதும் பாதிக்கக்கூடாது,' என, தொடக்க கல்வி இயக்குனரகம்
அறிவுறுத்தியுள்ளது.
           ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், மாநகராட்சி மற்றும் அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர், எம்.பில்., - பி.எச்.டி., படிக்கின்றனர். பணியில் உள்ள ஆசிரியர்கள், உயர்கல்வி பயில முன்அனுமதி கேட்டு, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்புவது வழக்கம். இதற்கான அனுமதியை அந்தந்த பகுதி உதவி தொடக்க கல்வி அலுவலர் அல்லது கூடுதல் தொடக்க கல்வி அலுவலரே வழங்கலாம் என தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், "உயர்கல்வி பயில்வதற்கு ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கும் முன், நிபந்தனையை பின்பற்ற வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், கற்பித்தல் பணி பாதிக்கக்கூடாது. தனது கடமையில் இருந்து ஆசிரியர் சிறிதும் விலகக்கூடாது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி