Skip to main content

சிறப்பு கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

'கல்வித் துறைக்கு மாறுதல் கேட்டு காத்திருக்கும் கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு நவ., 25க்கு முன் சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும்,' என இணை இயக்குனர் அமுதவல்லியிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க
கள்ளர் பிரிவு மாநில செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஸ்ரீரங்கநாதன் கூறியதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கள்ளர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் 109 பேர் பள்ளிக் கல்வித் துறை மாறுதல் கேட்டு ஆறு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். கள்ளர் பிரிவில் 140 ஆசிரியர் காலிப் பணியிடங்களும் உள்ளன. தற்போது இத்துறையில் காலியான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங் நவ., 25, 26ல் நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் நடத்தும் முன் கல்வி துறைக்கு மாற்றம் கேட்டு சொந்த மாவட்டங்களுக்கு திரும்புதற்காக காத்திருக்கும் 109 ஆசிரியர்களுக்கு துறை மாறுதல் உத்தரவுகள் வேண்டும். நவ.,25, 26ல் நடக்கும் கவுன்சிலிங்கில் அதிக இடங்கள் காலியாக இருக்கும். இதுகுறித்து இணை இயக்குனரிடம் வலியுறுத்தினோம், என்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2