Skip to main content

ஐ.ஐ.டி., சென்னை அறிமுகப்படுத்தவுள்ள புதிய செயல்முறை


சென்னை: அடுத்தக் கல்வியாண்டு முதற்கொண்டு, மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான எலக்டிவ் பாடங்களை தேர்வுசெய்து கொள்வதற்கான தன்னாட்சி அதிகாரத்தை, ஐ.ஐ.டி., சென்னை வழங்கவுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது: பொதுவாக, இந்திய ஐ.ஐ.டி.,களின்
விதிமுறைப்படி, ஒரு மாணவர், ஐ.ஐ.டி. படிப்பில் சேரும் முன்னதாகவே, தனக்கு விருப்பமான பொறியியல் பிரிவை தேர்வுசெய்ய வேண்டும்.

இந்த விதிமுறையில் மாற்றம் செய்யவோ அல்லது திருத்தியமைக்கவோ முடியாத நிலையில், ஐ.ஐ.டி., சென்னை ஒரு புதிய செயல்முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.

அதன்படி, மாணவர்கள், சேர்க்கை பெறும்போது தேர்வு செய்துகொள்ளும் வகையில், குறைந்தளவு பாடத்திட்டத்தை மட்டும் அறிமுகம் செய்து, அதன்பிறகான காலகட்டத்தில், multi - disciplinary தன்மைக்கொண்ட எலக்டிவ் பாடங்களை, தங்களுக்கு விருப்பமான முறையில் தேர்வுசெய்துகொள்ளும் வகையிலான சுதந்திரத்தை வழங்கக்கூடிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

அமெரிக்காவிலுள்ள Purdue பல்கலையில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப் படிப்பின் தாக்கத்தினாலேயே இப்புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி