Skip to main content

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி:மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு


அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிக்கு நடவடிக்கை எடுக்கும்படி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 5720 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என ஆக.,8 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தமிழகத்தில் 37ஆயிரத்து 2
பள்ளிகள் உள்ளன. 2080 பள்ளிகளில் கழிப்பறைகள் பயனற்ற நிலையில் உள்ளன. கல்வித்துறைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் அரசு, இவற்றை சரி செய்வதில்லை.
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகளை 6 மாதங்களுக்குள் நிறைவேற்ற 2012 ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. நடப்பு ஆண்டில் கல்வித்துறைக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பள்ளிகள் 37 ஆயிரத்து 2. கழிப்பறை இல்லாத பள்ளிகள் 4375, ஆண்கள் பள்ளிகள் 4060. பெண்கள் பள்ளி 898, 1159 ஆண்கள் பள்ளியில் பயனற்ற நிலையில் கழிப்பறைகள் உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகளை நிறைவேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு புகார் செய்தேன். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்துதர உத்தரவிட வேண்டும். பயனற்ற கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜரானார்.

நீதிபதிகள்:

மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு தண்ணீர் வசதியுடன் தனித்தனி கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். இதில் மேற்கொண்ட நடவடிக்கை, நிறைவேற்ற தேவையான கால அவகாசம் குறித்து தமிழக அரசு ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இம்மனுவில் கூறப்பட்டுள்ள பள்ளிக் கழிப்பறைகளின் நிலை பற்றி பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். விசாரணை 6 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா