Skip to main content

உங்க வீட்டில் நீங்க ஒரே பெண் குழந்தையா? – உங்களுக்கு கல்வி உதவித்தொகை நிச்சயம்!

DELHI:- சுவாமி விவேகானந்தா ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை
அறிவித்துள்ளது.
கல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோளாக பெண்கள் கல்வி மேம்பாடு விளங்குகிறது. சமூகத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டியது அவசியமாகும். 

அந்தவகையில் குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தைக்கான சிறப்பு சலுகையை இந்திய அரசு வழங்கி வருகின்றது. அங்கீகாரம் பெற்ற பல்கலை, கல்லூரி, கல்வி நிறுவனங்களில் சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 8 ஆயிரமும், மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும். சூழ்நிலை அடிப்படையில் ஐந்தாம் ஆண்டும் உதவித்தொகை நீட்டிக்கப்படும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும். முழுநேர படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். நவம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். கூடுதல் தகவல்களுக்கு யுஜிசி இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks With Warm Regards….
By Anandan S.
Dharmapuri Dt.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி