Skip to main content

நேஷனல் ஜியாக்ரபிக் விலங்குகள்

நேஷனல் ஜியாக்ரபிக் இதழும், தொலைக்காட்சி சேனல்களும், அவை தரும் அரிய தகவல்களுக்குப் பெயர் பெற்றவை. நாம் எளிதில் காண முடியாத பலவற்றைப் பற்றி தகவல்களைத் தரும் நேஷனல் ஜியாக்ரபிக் நிறுவனம் விலங்குகள் குறித்து தகவல்களைத் தர http://animals.nationalgeographic.com/animals/
என்ற முகவரியில் ஓர் இணைய தளத்தை இயக்குகிறது. நாம் இதுவரை கேள்விப்படாத விலங்குகள் குறித்தெல்லாம், மிக அருமையான தகவல்களை முழுமையாகத் தருகிறது. இந்த தளம் நம்மை வழி நடத்துவது மிக எளிமையாக உள்ளது. Animals Home, Facts, Photos, Video, Animal Conservation, and Big Cats Initiative எனப் பல பிரிவுகளில், தகவல்கள் கிடைக்கின்றன. மிகப் பெரிய அளவில், விலங்குகளின் பட்டியல் நீள்கிறது. இவை வகைப்படுத்தப்பட்டுள்ளதால், நாம் தேடும் விலங்கு, அல்லது தகவல் சார்ந்த விலங்கினைக் கண்டறிய முடியும். பெரியவர்கள் மட்டுமின்றி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விலங்குகள் குறித்து அறிய மிகவும் அரிய தகவல்களைக் கொண்டுள்ள இந்த தளத்தினை அவசியம் காண வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா