Skip to main content

அங்கன்வாடி ஊழியர் நியமனத்தில் விதிமீறல்: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு


ராமநாதபுரம், கரூர் மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில், தற்போதைய நிலை தொடர, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கரூர் நந்தனார் அரிக்காபட்டி அமுதா தாக்கல் செய்த மனு: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கமிஷனர் 2012 ல்
சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி மெயின் அங்கன்வாடி, மினி அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடம் ஏற்பட்டால், அதை இடமாறுதல் மூலம் நிரப்ப வேண்டும்.
அதன்பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, நிரப்ப வேண்டும். தற்போது மெயின் அங்கன்வாடி மையங்களில் 8264, மினி அங்கன்வாடி மையங்களில் 429 பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் 8497 காலியாக உள்ளன. தற்போது அரசு 8264 பணியிடங்களில் 2066 இடங்களை சிறிய அங்கன்வாடிகளில், 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் மூலம் நிரப்ப உள்ளது. மீதமுள்ள 6198 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப உள்ளனர். மினி அங்கன்வாடி மையங்களில் ஏராளமானோர் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். மெயின் அங்கன்வாடிகளுக்கு 75 சதவீத பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது சட்டவிரோதம். ஏற்கனவே மினி அங்கன்வாடி மையங்களில் பணிபுரிவோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மினி அங்கன்வாடிகளில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, பெரிய மையங்களுக்கு இடமாறுதல் செய்து முடித்தபின், எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளதோ, அப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும். மெயின் அங்கன்வாடிகளில் 75 சதவீத பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை முதன்மைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ராமநாதபுரம் முள்ளவாடி மினி அங்கன்வாடி ஊழியர் ஜெயசீலி மற்றொரு மனு தாக்கல் செய்தார். நீதிபதி டி.ராஜா முன், மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான், வக்கீல் ஏ.எல்.கண்ணன் ஆஜராகினர். அரசு கூடுதல் வக்கீல் முகமது முகைதீன் அளித்த பதிலில், "நேர்காணல் நடக்கவில்லை. விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. நியமனம் மேற்கொள்ளவில்லை,” என்றார். நீதிபதி உத்தரவு: ராமநாதபுரம், கரூர் மாவட்டங்களில் பணி நியமனத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலையே தொடர வேண்டும். அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்