Skip to main content

பணவிடை பட்டுவாடா செய்யும் தபால் ஊழியர்கள் ‘அன்பளிப்பு’ கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

பணவிடை பட்டுவாடா செய்யும்போது தபால் ஊழியர்கள் ‘அன்பளிப்பு’ கேட்டால் புகார் தெரிவிக்கலாம் சென்னை அஞ்சல் துறை தலைவர் அறிவிப்பு
பணவிடை பட்டுவாடா செய்யும்போது தபால் ஊழியர்கள் ‘அன்பளிப்பு’ கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை அஞ்சல் துறை தலைவர்
மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்து உள்ளார்.

அன்பளிப்பு வேண்டாம்
சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில், 20 தலைமை அஞ்சலகங்கள், 551 துணை அஞ்சலகங்கள், 1,646 கிளை அஞ்சலகங்களின் மூலமாக பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் அஞ்சலக சேவைகளுக்கு குறிப்பாக முதியோர் உதவி தொகை பணவிடை வழங்கப்படும்போது, ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் பணமாகவோ, பொருளாகவோ தயவு செய்து தபால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஒத்துழைப்பு
தபால் ஊழியர்கள் பணவிடை பட்டுவாடா செய்யும்போது, பணம் கேட்பதோ அல்லது பணம் பிடித்தம் செய்து வழங்கப்படுவதோ இருப்பின், பயனாளிகள் தங்கள் புகார்களை, ‘‘அஞ்சல் துறை தலைவர், சென்னை நகர மண்டலம், தொலைபேசி எண்– 044–28592877 அல்லது இணை இயக்குனர், மத்திய புலனாய்வு துறை என்ற முகவரியிலோ, தொலைபேசி எண் 044–28270992 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இத்தகைய புகார்கள் எங்களுக்கு கிடைக்கப் பெற்று, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பல தபால் ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பலர் பணியில் இருந்து கூட நீக்கப்பட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் பயனாளிகள் அஞ்சல் துறையின் வேண்டுகோளை ஏற்று அஞ்சலக சேவைகள் மேம்பட தங்கள் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்