Skip to main content

அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை பெட்டி

அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், ஆலோசனை பெட்டிகளை வைக்க அரசு
உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. 

குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் சமூக நிலையை மேம்படுத்தும் நோக்கத்தில், இத்திட்டத்தின் மூலம், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் இணை உணவு வழங்கப்படுகிறது.குழந்தைகளின் எடையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிட ஏதுவாக, நவீன எடை பார்க்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் நலனுக்கான இத்திட்ட செயல்பாடுகள் குறித்து, மக்கள் ஆலோசனை அல்லது புகார் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட உள்ளது.ஒவ்வொரு குழந்தைகள் மையத்திலும், ஆலோசனை பெட்டி வைக்கப்பட உள்ளது. மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி சுசீலா கூறியதாவது: அனைத்து மையங்களிலும் ஆலோசனை பெட்டி வைக்க, அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்டிகள் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம்.விரைவில், அங்கன்வாடி மையங்களில் ஆலோசனை பெட்டிகள் பொருத்தப்படும். மாதம் ஒருமுறை பெட்டியில் உள்ள பொதுமக்களின் கடிதங்களை எடுத்து படித்து, அறிக்கையாக தயாரித்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா