ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நடைமுறை படுத்தப்பட உள்ளதாக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அலுவலக நேரத்தில் தாமதமாக வருபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாமல், கடுமையான விதிகள் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு