Skip to main content

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 940 பணியிடங்கள் - அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 940 பணியிடங்கள் - அறிவிப்பு டிரைவர் கண்டக்டர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் நெல்லை மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் காலியாக உள்ள 940 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டலத்தில் உதவி பொறியாளர் (பயிற்சி), இளநிலை பொறியாளர் (பயிற்சி), இளநிலை உதவியாளர், சேம ஓட்டுநர், சேம நடத்துனர், இளநிலை தொழில் வினைஞர் பணியிடங்கள் என 676 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள்:

1. உதவி பொறியாளர் (பயிற்சி): 

6 இடங்கள். 

தகுதி: 

இயந்திரவியல் அல்லது ஆட்டோமொபைல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ., மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி சட்டத்தின் கீழ் ஓராண்டு பழகுநர் பயிற்சி முடித்து அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ஐஐஆர்டி உறுப்பினர் பட்டத்தேர்வு படித்தவர்களுக்கு முன்னுரிமை.

வயது:

1.7.2014 அன்று பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 35 வயதுக்கு மிகாமலும், எஸ்சி., எஸ்டியினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கும் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.

2. இளநிலை பொறியாளர் (பயிற்சி):

2 இடங்கள். 

தகுதி:

இயந்திரவியல் அல்லது ஆட்டோமொபைல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி சட்டத்தின் கீழ் ஓராண்டு பழகுநர் பயிற்சி முடித்து அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். இயந்திரவியல் அல்லது ஆட்டோமொபைல் பாடங்களில் முதுநிலை பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது:

1.7.2014 அன்று பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 35 வயதுக்கு மிகாமலும், எஸ்சி., எஸ்டியினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கும் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.

3. இளநிலை உதவியாளர்:

27 இடங்கள்.

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. எம்.ஏ., எம்காம், எம்.எஸ்சியுடன் போக்குவரத்து மற்றும் கணக்கியல் பாடங்களில் பி.ஜி. டிப்ளமோ அல்லது சிஏ/ ஐசிடபிள்யூஏ இன்டர்மீடியேட் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது:

1.7.2014 அன்று பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 35 வயதுக்கு மிகாமலும், எஸ்சி., எஸ்டியினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கும் அதிகபட்ச வயது வரம்பில் சலுகை உண்டு.

4. சேம ஓட்டுநர்:

280 இடங்கள். 

தகுதி: 

8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் பேச, எழுத தெரிந்திருப்பது அவசியம். செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம், முதலுதவி சான்று பெற்றிருக்க வேண்டும். உடல் அங்க குறைபாடு இல்லாதவராக இருக்க வேண்டும். 

வயது: 

1.7.2014 அன்று பொதுப்பிரிவினர் 40க்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, எஸ்சி., எஸ்டியினர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அனைவரும் குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

5. சேம நடத்துநர்:

278 இடங்கள். 

தகுதி: 

எஸ்எஸ்எல்சி தேர்ச்சி. தமிழில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க நடத்துனர் உரிமம், முதலுதவி சான்று அவசியம். குறைந்தபட்சம் 167 செ.மீ., உயரமும், 45 கிலோ எடையும் இருக்க வேண்டும். 

வயது: 

1.7.2014 அன்று பொதுப்பிரிவினர் 20 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 35 வயதுக்குள்ளும், எஸ்சி., எஸ்டியினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

6. இளநிலை தொழில் வினைஞர்:

83 இடங்கள். 

தகுதி: 

எஸ்எஸ்எல்சி தேர்ச்சி. தமிழில் பேச, எழுத தெரிந்திருப்பது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி பள்ளியில் தொழிற்பயிற்சி குறிப்பிட்ட பிரிவில் பயின்று என்டிசி பெற்றிருக்க வேண்டும். உயரம்: 152 செ.மீ., எடை: 45 கிலோ. 

வயது: 

1.7.2014 அன்று பொதுப்பிரிவினர் 18 லிருந்து 30 வயதுக்குள்ளும், பிசி மற்றும் மிகவும் பிற்பட்டோர் 35 வயதுக்குள்ளும், எஸ்சி., எஸ்டியினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை ரூ.100க்கு The Managing Director, Tamilnadu Transport Corporation (Tirunelveli) Ltd., என்ற பெயருக்கு நெல்லையில் மாற்றத்தக்க வகையில் டிடி மூலம் செலுத்தவும். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மண்டல அலுவலகங்களில் விண்ணப்பத்தை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

தபாலில் பெற விரும்புபவர்கள் ரூ.50 செலுத்தி மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிமிடெட், மைய அலுவலகம், 23/2 தூத்துக்குடி ரோடு, கட்டபொம்மன் நகர், வி.மு.சத்திரம், திருநெல்வேலி-627011 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் பணிகள்:

1. சேம ஓட்டுநர் உடன் நடத்துனர்:

260 இடங்கள். 

தகுதி: 

எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க வாகன ஓட்டுநர் உரிமம், முதலுதவிசான்று, பொதுப்பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் ஆகியவை உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச உயரம் - 160 செ.மீ., எடை: 48 கிலோ. 

வயது: 

1.7.2014 அன்று பொதுப்பிரிவினர் 40 வயதிற்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, சீர்மரபினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடினர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 24 பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

2. உதவி பொறியாளர் (பயிற்சி):

3 இடங்கள். 

தகுதி: 

60 சதவீத தேர்ச்சியுடன் இயந்திரவியல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் பி.இ., மற்றும் தொழிற் பழகுநர் பயிற்சி சட்டத்தின் கீழ் ஓராண்டு பழகுநர் பயிற்சி முடித்து அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது: 

1.7.2014 அன்று பொதுப்பிரிவினருக்கு 18 லிருந்து 30க்குள். பிற்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 35க்குள்ளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

3. இளநிலை பொறியாளர் (பயிற்சி):

1 இடம்.

தகுதி: 

இயந்திரவியல் அல்லது ஆட்டோமொபைல் பாடத்தில் டிப்ளமோ மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி சட்டத்தின் கீழ் ஓராண்டு பழகுநர் பயிற்சி முடித்து அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை 'The Managing Director, State Express Transport Corporation (Tamilnadu) Ltd' என்ற பெயருக்கு நாகர்கோவிலில் மாற்றத்தக்க வகையில் ரூ.100 டிடி எடுத்து நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

தபால் மூலமாக பெற விரும்புபவர்கள் விண்ணப்ப கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50 செலுத்தி, மேலாண்மை இயக்குநர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிட்., தலைமை அலுவலகம், பல்லவன் சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் பெற கடைசி நாள்: 20.11.2014.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 8.12.2014.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்