Skip to main content

40 லட்சம் பேருக்கு வேலை: அரசு புதிய திட்டம்

பெங்களூரு: "தேவனஹள்ளி அருகில், 10,500 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப முதலீடு பிரிவுக்கு, முதல் கட்டமாக, 2,722 ஏக்கர் நிலத்தை, உடனடியாக கையகப்படுத்தி கொள்ளும்படி, கே.ஐ.ஏ.டி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என, முதல்வர் சித்தராமையா
கூறினார்.

பெங்களூரு புறநகர் பகுதியில், சர்வதேச பொருட்காட்சி மையத்தில் நடந்த மூன்று நாள், 'பெங்களூரு ஐ.டி.,பிஸ்' நிகழ்ச்சியை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்து பேசியதாவது: ஆண்டுதோறும், தகவல் தொழில் நுட்ப முதலீடு பிரிவில், 40 மில்லியன் அளவு தொழில் நடக்கும். இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும், 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு, மாநில அரசு, அனைத்து உதவிகளையும் செய்யும். 2 மற்றும் 3ம் பிரிவிலுள்ள நகரங்களில், தகவல் தொழில் நுட்ப பிரிவில் முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர்களுக்கு, தேவையான, அனைத்து உதவிகளும் வழங்கப்படும். கர்நாடகாவில், தகவல் தொழில் நுட்ப பிரிவின் அபிவிருத்திக்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படும். ஐ.டி., - பி.டி., கம்பெனிகள், தங்கள் கம்பெனிகளை விரிவுபடுத்தி கொள்ள வசதியாக, அவர்களுக்கு, அனைத்து விதமான சலுகைகளும் வழங்கப்படும். நாட்டின் தகவல் தொ ழில் நுட்ப ஏற்றுமதியில், 30 சதவீதம் அளவு கர்நாடகாவின் பங்காக உள்ளது. பெங்களூரு, அமெரிக்க நகரங்களுடன் போட்டியிட தயாராகிறது. இவ்வாறு, சித்தராமையா பேசினார்.

தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் பேசுகையில், ''ஐ.டி., பி.டி., அபிவிருத்திக்காக, மாநில அரசு, பெரும்பாலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 2 மற்றும் 3வது பிரிவிலுள்ள நகரங்களில், முதலீடு செய்ய முன்வந்தால், முதலீட்டாளர்களுக்கு, இலவச நிலம், 2 ஆண்டு வரை, ஊழியர்களுக்கு எதிர்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., வசதி ஏற்படுத்தி தரப்படும்,'' என்றார். ஐ.டி., - பி.டி., துறை செயலர் ஸ்ரீவத்ச கிருஷ்ணா பேசுகையில், "தமிழகம், தெலுங்கா னா மாநிலங்களுடன் ஒப்பிட்டால், பெங்களூருவில், அதிகமான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்