Skip to main content

அரசு பணிக்கு 'வாக் - இன்' முறை: 1,727 டாக்டர் தேர்வு செய்ய முடிவு

அரசு மருத்துவமனைகளில், காலியாக உள்ள, 1,727 சிறப்பு பிரிவு உதவி டாக்டர் பணியிடங்கள், 'வாக் - இன்' என்ற நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என,
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள, 2,176 உதவி டாக்டர்கள் இடங்களை நிரப்ப, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், எழுத்து தேர்வு நடத்தியது. இதில், வெற்றி பெற்றோருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. விரைவில், இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், சிறப்பு பிரிவுகளின் கீழ், 1,727 தற்காலிக உதவி டாக்டர்கள் இடங்களை, 'வாக் - இன்' முறையில், தேர்வு செய்ய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அரசு மருத்துவ நிலையங்களில், 36 சிறப்பு பிரிவுகளில், காலியாக உள்ள, 1,727 உதவி டாக்டர்கள் பயணியிடங்கள், 'வாக் - இன்' தேர்வு முறையில், நிரப்பப்பட உள்ளன. இதற்கு, டிச., 1ம் தேதிக்குள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி