Skip to main content

1,727 டாக்டர் வேலை காலி டிச., 1க்குள் விண்ணப்பிக்கலாம்



அரசு மருத்துவமனைகளுக்கு, 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 'டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என,
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 2,176 டாக்டர்களை நியமிக்க, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள், பணி ஆணை வழங்கப்பட உள்ளது.இந்நிலையில், 36 சிறப்பு பிரிவுகளின் கீழ், 1,727 தற்காலிக உதவி மருத்துவர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. 'இதில் சேர விரும்புவோர், டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2