Skip to main content

பள்ளி வாகன பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்த டிச., 15ம் தேதி வரை கெடு

'பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு விதிமுறைகளை, டிச., 15ம் தேதிக்குள், அமல்படுத்தாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, கர்நாடக போக்குவரத்துத் துறை, பள்ளி நிர்வாகங்களை எச்சரித்து உள்ளது.

கர்நாடக போக்குவரத்து கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து
பள்ளி வாகனங்களிலும், பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டிய அவசியம் குறித்து, பள்ளி நிர்வாகம், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே நடந்த கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பாதுகாப்பு விதிமுறைகள், டிச., 15ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனையின் போது, விதிகளை அமல்படுத்த தவறிய, நிர்வாகங்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்படி, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:


* பள்ளி வாகனங்கள் முன்புறமும், பின் புறமும் 'ஸ்கூல் பஸ்' என்று தெளிவாக எழுத வேண்டும்.


* வாடகைக்கு எடுக்கப்படும் வாகனங்களாக இருப்பின், 'ஆன் ஸ்கூல் ட்யூட்டி' என்று முன்பும், பின்பும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.


* அனுமதிக்கப்பட்ட இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேல், மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது.


* வாகனங்களில் தீயணைப்பு கருவியும், முதலுதவி பெட்டியும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


* ஜன்னல் கம்பிகள் நீளமாக, எளிதில் திறக்கக்கூடிய வகையில் அமைக்க வேண்டும்.


* பள்ளியின் பெயரும், தொலைபேசி எண்ணும், பஸ்களின் மீது எழுதப்பட்டிருக்க வேண்டும்.


* வாகனங்களின் கதவுகளில் உள்ள பூட்டுகள், எளிதில் திறக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும்.


* மாணவர்கள் அமரும் இருக்கைகளின் கீழ், அவர்கள் கொண்டு வரும் புத்தக பைகள் வைக்குமளவுக்கு, இடவசதி அமைய வேண்டும்.


* பஸ்சில் மாணவர்கள் பாதுகாப்புக்காக, முடிந்தவரை ஆசிரியராக இருப்பவர் ஒருவர், உடன் செல்வது அவசியம்.


* அதிகபட்சம் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய வகையில், வேகக்கட்டுப்பாட்டு கருவி அமைக்க வேண்டும்.


* பள்ளி வாகனம் என்று குறிப்பிடும் வகையில், ஹைவே மஞ்சள் நிறம் பூசியிருக்க வேண்டும். வாகனத்தின் நடுப்பகுதியில், 150 மி.மீ., அகலத்துக்கு பச்சை நிறம் பார்டர் அடிக்க வேண்டும்.


* வாகனங்களில், கறுப்பு திரை கண்ணாடிகள் இருக்கக் கூடாது.


* வாகனங்களில் பயணிக்கும் மாணவர்களின் பெயர், வகுப்பு, வயது, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், இயக்கப்படும் ரூட் விவரங்கள், ஆபத்து நேரத்தில் உதவும் வகையில், தயாராக வைத்திருக்க வேண்டும்.


* பள்ளி வாகனங்கள் குறித்து, பாதுகாப்பு கமிட்டி ஒன்றை அமைத்து, பயணம் செய்யும் மாணவர்களையும், வாகனங்களையும், பள்ளி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா