Skip to main content

நவம்பர் 14. குழந்தைகள் தினம்!

இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும்
கொண்டிருந்தார். அதே போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா  என செல்லமாக அழைக்கப்பட்டார்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆனால் அச்சமயத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.