Skip to main content

பெண்களுக்கான அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள்


அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக", கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 187 அங்கன்வாடி பணியாளர், 20 குறுமைய
பணியாளர், 188 உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கல்வி
பிரதான, குறுமைய அங்கன்வாடி பணியாளருக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது : 01.10.2014ல் 25 முதல் 35க்குள். விதவைகள், ஆதரவற்றவர்கள், உடல் ஊனமுற்றோர். உதவியாளர் பணிக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது: 01.10.2014ல் 20 முதல் 40. விதவை, ஆதரவற்றோர், ஊனமுற்றவர்களுக்கு உரிய வயது சலுகை உண்டு.விதவை, ஆதரவற்றோர் தாசில்தாரிடமும், ஆதரவற்ற விதவை ஆர்.டி.ஓ.,விடம் சான்று பெற வேண்டும். பணியிடத்தில் இருந்து 10 கி.மீ., சுற்றளவிற்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்
பிரதான அங்கன்வாடி பணியாளர் 2,500 - 5,000 தர ஊதியம் ரூ.500 இதர படிகள். குறு அங்கன்வாடி பணியாளர் 1,800 - 3300 , தர ஊதியம் ரூ.400 பிற படிகள். உதவியாளர்கள் ரூ.1,300 - 5,000, தர ஊதியம் ரூ.300 பிற படிகள். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை நவ.,17 மாலை 5க்குள் அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் தபாலிலோ, நேரிலோ ஒப்படைக்கவும். விண்ணப்பத்தை இணையதளத்திலும், டவுண்லோடு செய்யலாம், என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா