Skip to main content

வினா - விடை புத்தகங்கள் மாவட்டங்களில் விற்பனை


         பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்கள், 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். 

           பள்ளி கல்வித்துறையைச் சேர்ந்த, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகம், பொதுத்தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, பாட ஆசிரியர் குழு மூலம்
தயாரித்து, குறைந்த விலைக்கு, ஆண்டுதோறும் விற்பனை செய்கிறது. இந்த விற்பனை, சென்னையில் மட்டுமே நடந்து வருகிறது. இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், வினா - விடை புத்தகங்களை வாங்க, சென்னை வர வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க, மாவட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 32 மாவட்டங்களிலும், வினா - விடை புத்தகங்களை விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பு: 
பத்தாம் வகுப்பு வினா - விடை புத்தகங்கள், தமிழ் வழியில், 205 ரூபாய்க்கும் (ஒரு செட்), ஆங்கில வழியில், 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
பிளஸ் 2 வினா - விடை புத்தகங்கள், 25 ரூபாயில் இருந்து, 95 ரூபாய் வரை, தனித்தனியே விற்பனை செய்யப்படும். நவ., 10ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட மையங்களில், இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில், அரசு மேல்நிலைப் பள்ளி - அரும்பாக்கம், ஜெயகோபால் கரோடியோ மேல்நிலைப் பள்ளி - சைதாப்பேட்டை, இ.எல்.எம்., மேல்நிலைப் பள்ளி - புரசைவாக்கம்,
எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளி - சேத்துப் பட்டு, ஜெயகோபால் கரோடியோ மகளிர் மேல்நிலைப் பள்ளி - சூளைமேடு ஆகிய ஐந்து பள்ளிகளில், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா