சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற, புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, தமிழக அரசின்
கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கல்வி விதிமுறைகளில், சில திருத்தங்களை கொண்டு வந்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்க வேண்டும் எனில், பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என, விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்து, தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில், நேற்று முன்தினம், சென்னையில் நடந்த பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளி தொடர்பான விதிமுறை திருத்தத்திற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி