Skip to main content

மானியத்துடன் சோலார் மோட்டார் திட்டம்


மத்திய, மாநில அரசுகளின், 80 சதவீத மானியத்துடன், 'சோலார்' சக்தியில் இயங்கும் மோட்டார் பொருத்தும் திட்டத்துக்கான ஆய்வு பணியில் தாமதம்
ஏற்படுவதால், விவசாயிகள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.



விவசாய கிணறுகளுக்கு, அரசு மானியத்துடன் சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பொருத்தும் திட்டம், கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 50 சதவீதம்; தமிழக அரசின் எரிசக்தி திறன் மேம்பாட்டு அமைப்பில் இருந்து 30 சதவீதம் என, 80 சதவீத மானியம் கொண்ட இத்திட்டத்தில் பயனாளிகள், 20 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளுக்கு மோட்டார் பொருத்த, பயனாளிகள் 1.04 லட்சம் ரூபாயும், திறந்தவெளி கிணறுகளுக்கு 1.17 லட்சம், நீர்தேக்க தொட்டிகளுக்கு 1.34 லட்சம் பங்களிப்பு செலுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், 200 பேர் விண்ணப்பித்தனர். கடந்த நிதியாண்டில், 120 மோட்டார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. 120 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விண்ணப்பித்து பல மாதங்களாகிய நிலையில், இதுவரை மாவட்ட அளவில் ஒரே ஒரு ஆழ்குழாய் கிணற்றுக்கும், ஒன்பது திறந்தவெளி கிணறுகளுக்கு மட்டும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறையினரும், ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்தினரும், ஆய்வை முடிக்க தாமதிப்பதால், வரும் கோடை காலத்துக்குள், சோலார் மோட்டார் கிடைக்குமா என, விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்