Skip to main content

தொடக்க கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு : சென்னையில் நாளை நடக்கிறது.



தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கு உரிய 2ம் கட்ட கலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

தொடக்கக் கல்வித் துறையில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவிஉயர்வு பெறுவதற்கு உரிய முன்னுரிமை பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியானது. 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியை தகுதி நாளாக கொண்டு இப்பட்டியலில் 195 பேர் இடம் பெற்றனர்.இவர்களில் ஒன்று முதல் 30 வரை இடம்பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீதம்உள்ள 165 பேர் தங்களுக்கு எப்போது பதவி உயர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 முதல் 160 முடிய உள்ள தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மூலம் உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது.இதற்கான கலந்தாய்வு நாளை (25ம் தேதி) சென்னை தொடக்க கல்வி இயக்ககூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் என தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்