Skip to main content

பழுதான கட்டடத்தில் வகுப்பு நடத்தக் கூடாது - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்


 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதானகட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாமென, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தமிழகத்தில், கடந்த 14ம் தேதி முதல், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும்தனியார் பள்ளிகளில் பழுதான கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மழைக் காலம் துவங்கியுள்ளதால் பழுதான கட்டடங்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது. மின்கசிவு ஏற்பட்டால் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து சரி செய்து கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் மாணவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது. கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் மாணவர்கள்செல்லாத வகையில் தடுப்புவேலி ஏற்படுத்த வேண்டும் என, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' .

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்