Skip to main content

தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

செப்., 25 முதல் அக்.,10 வரை நடைபெற்ற +2 துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு முடிவுற்ற 15 தினங்களுக்குள் தேர்வர்களுக்கு
வழங்கிட வேண்டுமென முடிவு மேற்கொள்ளப்பட்டு அதன்படி, அக்.,10 (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் (Government Examinations Service Centre) 29.10.2014 முதல் 31.10.2014 வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/-ஐ பணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாளின் நகல் (Copy of the answer sheet) பெறுவதற்கான கட்டணம்

பகுதி – I மொழி - ரூ.550/-

பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.550/-

ஏனையப் பாடங்கள் - ரூ.275/-

மறுகூட்டல் (Re-totalling) கட்டணம்

மறுகூட்டல் கட்டணம்

பகுதி – I மொழி, பகுதி – II (ஆங்கிலம்) - ரூ.305/-

மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்)

ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) -ரூ.205/-

விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாட்களின் நகல்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், மறுகூட்டல் முடிவுகள் பற்றி அறியதுகொள்ளவும் இயலும் என்பதால் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்புடன் வைத்திருத்தல் வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன