Skip to main content

TNPSC : உதவி ஆணையர் பதவி சான்றிதழ் சரிபார்ப்புக்கான விண்ணப்பதாரர் பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகப் பணியில் அடங்கிய உதவி ஆணையர் பதவிக்கான 4 காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்த மார்ச் 8, 9ம் தேதிகளில்
கணினி வழித்தேர்வு முறையில் நடத்தப்பட்டது. அதில் 242 தேர்வர்கள் பங்கேற்றனர்.
தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்க நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட, 20 விண்ணப்பதாரர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in  வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் இத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடும் பொருட்டு ஆன்லைன் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல் அடிப்படையில் சான்றிதழ்களின் நகல்களை சரிபார்ப்புக்காக வருகிற 1ம் தேதிக்குள் பதிவஞ்சல் மற்றும் பதிவேற்றம் மூலம் அனுப்ப வேண்டும். 1ம் தேதிக்கு முன்பாக சான்றிதழ் அனுப்பாத விண்ணப்பதாரர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்