Skip to main content

TET வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்.

அரக்கோணம் நகரமன்றதலைவர் பதவிக்காக தேர்தல்வருகிற 18–ந்தேதி நடக்கிறது. இந்ததேர்தலில் அ.தி.மு.க.சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.இந்த நிலையில்நேற்று இரவு அ.தி.மு.க.தேர்தல்கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்நடந்தது.

கூட்டத்திற்கு பள்ளிகல்விதுறை அமைச்சர்கே.சி.வீரமணி தலைமைதாங்கினார். அரக்கோணம்எம்.பி. கோ.அரி, வேலூர்எம்.பி. செங்குட்டுவன்,அரக்கோணம் எம்.எல்.ஏ.சு.ரவி, மாவட்ட செயலாளர்என்.ஜி.பார்த்திபன்,அரக்கோணம் ஒன்றியகுழு தலைவர் பால்ராஜ்சீனிவாசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.அனைவரையும் நகரசெயலாளர்துரைகுப்புசாமி வரவேற்றார்.கூட்டத்தில் அமைச்சர்கே.சி.வீரமணி பேசியதாவது:–அரக்கோணம் நகரமன்றதலைவர்பதவிக்கு போட்டியிடும்எஸ்.கண்ணதாசனை ஆதரித்துகட்சி நிர்வாகிகள்ஒவ்வொரு வார்டாகசென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்–அமைச்சரின் 3ஆண்டு சாதனைகளை கூறிவாக்குகள் சேகரிக்கவேண்டும்.ஒவ்வொரு வார்டிலும்கட்சி நிர்வாகிகள்தீவிரமாக உழைத்து அதிகவாக்குகளை பெற்றுத்தரவேண்டும்.சுயேச்சை வேட்பாளர்கள்தான்என அலட்சியமாகஇருந்து விடக்கூடாது.நகரமன்ற இடைத்தேர்தலில்அரக்கோணம் நகரத்தில்அ.தி.மு.க. அதிகவாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற செய்யவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.




பின்னர் அவர்நிருபர்களிடம்கூறியதாவது:–தமிழ்நாட்டில் கடந்தஆட்சி காலத்தில் 71ஆயிரம் ஆசிரியர்காலியிடம் இருந்தது.அதன்பின்னர் முதல்–அமைச்சர்ஜெயலலிதா ஆட்சிபொறுப்பேற்ற பின்னர் 53ஆயிரம்ஆசிரியர்களை புதிதாகநியமனம் செய்தார்.தமிழ்நாட்டில் விரைவில்14 ஆயிரத்து 700ஆசிரியர்கள் நியமிக்கப்படஉள்ளனர்.அரசு பொதுத்தேர்வு தேர்ச்சிசதவீதத்தில் வேலூர்மாவட்டம்தொடர்ந்து பின்தங்கியநிலையில் இருந்து வந்தது.ஆனால், கடந்தகல்வியாண்டில் வேலூர்மாவட்டம் 4 சதவீதம்தேர்ச்சி சதவீதம் அதிகம்பெற்றுள்ளது.வரும் கல்வியாண்டில்வேலூர் மாவட்டம்தேர்ச்சி சதவீதத்தில் முதல்10 இடங்களுக்குள் வரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்தகுதி தேர்வில்வெயிட்டேஜ்முறைக்கு தீர்வு காணகோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர்ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா