Skip to main content

மங்கள்யான் ஹீரோக்கள்

கடந்த 2013 நவ.,5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் - செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய
முதல் செயற்கைக்கோள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலமாக இருந்தவர்கள் யார் தெரியுமா:



ராதாகிருஷ்ணன்: இஸ்ரோ தலைவர் மற்றும் இந்திய விண்வெளி துறையின் செயலராக இருக்கிறார். இஸ்ரோவின் அனைத்து விதமான திட்டங்கள், செயல்பாடுகளுக்கு இவரே முதல் பொறுப்பு. கேரளாவின் திருச்சூரை சேர்ந்த இவர் 1971ல் பி.எஸ்.சி., (எலக்ரிக்கல் இன்ஜினியரிங்) முடித்தார். இதன் பின் 1971ல் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். 1976ல் பெங்களூர் ஐ.ஐ.எம்.,மில் எம்.பி.ஏ., முடித்தார். ஐ.ஐ.டி., காரக்பூரில் 2000ல் பி.எச்டி., பட்டம் பெற்றார். 2009 அக்., 31ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றார். இஸ்ரோ அனுப்பிய "சந்திராயன்-1' விண்கலத்தில் இவரது பங்கு முக்கியமானது. 40 வருட விண்வெளி துறை அனுபவம் உடையவர். மத்திய அரசு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்