Skip to main content

தேர்ச்சி விகிதத்தைக் காட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஆசிரியர் சங்கம் கண்டனம்.



சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பாடு செய்துள்ள பயிற்சிக்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி
ஆசிரியர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.வீரபாண்டியராஜ், செயலாளர் கே.எம்.மூர்த்தி, பொருளாளர் காளிதாஸ், தனியார் பள்ளிச் சங்கச் செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் கூட்டாக சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில்வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மற்றும் விசாரணை என்ற நடவடிக்கையை எடுத்துள்ளார்.

மாணவர்களின் தேர்ச்சி என்பது ஆசிரியர், தலைமையாசிரியர் ஆகியோரை மட்டும் சார்ந்தது அல்ல. மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். பள்ளிக்கு தவறாமல் வந்த அத்தனை மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பள்ளிக்கு வராமல்,எப்போதாவது பள்ளிக்கு வரும் மாணவர்கள்தான் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்கள். குறிப்பாக அரசுப் பள்ளியில் எந்தப் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லையோ, அந்தப் பாடத்தில் மட்டுமே அதிகமானமாணவர்கள் தோல்வியுற்றுள்ளார்கள்.சென்ற கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெறாமல் 99.75 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெறச் செய்த ஆசிரியர்களும் கண்டிப்பாக பயிற்சிக்கு வந்து விளக்கக் கடிதம் கொடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. 250 மாணவரில் ஒருவர் தேர்ச்சி பெறாவிட்டாலும் அந்தப் பாடத்தின் ஆசிரியரின் பணி சரியில்லை எனக் கூறுவது சரியில்லை.

100 சதவீதம் தேர்ச்சி காட்டாதவர்களுக்கு பயிற்சி என்பதைவிட, தேர்ச்சிவிகிதம் 60 சதவீதத்திற்கு குறைவான பாட ஆசிரிர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் முதுகலை ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல், மன உளச்சலுக்குள்ளாக்குவது போல பயிற்சி, விசாரணை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்படுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே இந்தப் பயிற்சியை ரத்து செய்துவிட்டு, 60 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி விகிதம் காட்டியுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு