Skip to main content

சென்னை பல்கலை தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


சென்னை பல்கலையின், தொலைதூர கல்வி மையம் சார்பில், பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
இதுகுறித்த பல்கலை செய்தி:
கடந்த ஜூனில், பல்கலையின் தொலைதூர கல்வி மையம் சார்பில், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,), நூலக இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும்
சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள், இன்று இரவு, 8:00 மணிக்கு,
பல்கலையின், 'www.ideunom.ac.in, www.unom.ac.in' ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படும். இதில், ஏ11,12,13, சி,12 மற்றும், 13 ஆகிய எண்களில் துவங்கும் சேர்க்கை எண் கொண்ட எம்.சி.ஏ., மாணவர்கள்; ஏ12 மற்றும் சி13 ஆகிய துவக்க எண்களை கொண்ட, எம்.எஸ்சி., (ஐ.டி.,); ஏ 13 துவக்க எண்ணை கொண்ட, நூலக இளங்கலை, முதுகலை மாணவர்கள், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கு, ஒரு தாளிற்கு, 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள், பல்கலையின் இணைய தளத்தில், மறுமதிப்பீட்டிற்கு பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க, 19ம் தேதி இறுதி நாள்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2