Skip to main content

இன்று உலக கடல்சார் தினம்

இன்று உலக கடல்சார் தினம் -- கடல் - பூமியின் உடல்
கடல்சார் துறையை மேம்படுத்துவது; கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது; கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றை வலியுறுத்தி, உலக கடல்சார் நிறுவனத்தால் செப்.,25ம் தேதி உலக கடல்சார்
தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடல்சார் குற்றங்களை தடுத்து நிறுத்துவது; பாதுகாப்பு, சட்ட விதிகள் ஆகியவற்றில் சர்வதேச நாடுகளை ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கம்.

கப்பலுக்கு பாதுகாப்பளிப்பது; கடற்கொள்ளையர்களிடமிருந்து பிணைய கைதிகளை விடுதலை செய்வது; அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை இத்தினம் வலியுறுத்துகிறது. 

மிதக்கும் பயணம் "கடல் வழி' கொள்ளைகள், கடத்தல்கள் சர்வதேச சமூகத்துக்கு சவாலாக விளங்குகின்றன. இதனால் பொருள் மற்றும் உயிர் இழப்புகளை உலக நாடுகள் சந்திக்கின்றன. உலக பொருளாதார வளர்ச்சியில், கடல்சார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் எரிசக்தி, இரும்பு, உணவுப் பொருட்கள், தொழிற்சாலை தயாரிப்புகள் உள்ளிட்ட பல சரக்கு போக்குவரத்துகள் கப்பல் மூலமே நடக்கிறது. தற்போதைய சூழலில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பது, உலக நாடுகள் முன் உள்ள சவாலாக இருக்கிறது.கப்பல் போக்குவரத்தால் வியாபாரம் நடந்தாலும், அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். கடல் வளத்தை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம் என உலக கடல்சார் நிறுவனம் வலியுறுத்துகிறது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்