Skip to main content

டி.இ.டி - தகுதிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்...


சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகுதித் தேர்விற்கான அசல் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.இரண்டுமுறைக்கு மேல் பதிவிறக்கம் செய்ய இயலாதபடி இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆனால் சான்றிதழுக்குரிய தேர்வர்தான் அதனை பதிவிறக்கம்
செய்கிறாராஎன்பதை டி.ஆர்.பி எப்படி உறுதி செய்யும் என்பது தெரியவில்லை. எனக்கான தகுதிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டதாக காட்டுகிறது. ஒருவரது சான்றிதழை இணைய தளத்தில் பதிவிறக்கம்செய்யும் போது அவருடைய பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் மட்டுமே டைப் செய்தால் அவருக்கான அசல் சான்றிதழை பெற்று விடும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தகுதித்தேர்வின் மூலம் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் இறுதி பட்டியலை டி. ஆர். பி வெளியிடும் போதுஒவ்வொருவரது பதிவுஎண், பெயர், பிறந்த தேதி,உள்ளிட்ட முழுமையான விபரங்களோடு தான் வெளியிட்டுள்ளது. இதை வைத்துக்க்கொண்டு யார் வேண்டுமானாலும் யாருடைய சான்றிதழையும் இரண்டுமுறை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதனால் உரிய நபர் அவருக்கான சான்றிதழை பெறமுடியாத சூழல் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களின் வீட்டிலும் இணைய வசதியோ, பிரிண்டர் வசதியோ இல்லை. கணினி மையம் வைத்திருப்பவர்களையே நாடுகின்றனர். அவர்கள் பதிவிறக்கம் செய்யும் முறையான படிநிலை தெரியாமல் இரண்டு முறை தவறு நேர்ந்து விட்டால்மூன்றாவது முறை முயற்சித்து பார்க்கையில்சான்றிதழ் பதிவிறக்கம் ஆவதில்லை. ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக் கூடிய ஒருவருக்கான அசல் சான்றிதழை இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் முறையைனை கொண்டு வருகையில் உரிய தேர்வர்களின் முகவரிக்கு ரகசிய குறியீட்டு எண்ணை தபால் மூலம் அனுப்பி அந்த எண்ணை பதிவு செய்தால் மட்டுமே அசல் சான்றிதழ் பதிவிறக்கமாகும் வண்ணம் இதனை செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது போன்ற பாதுகாப்பை டி.ஆர்.பி செய்யவில்லை. எனவே தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.இது போன்ற சிக்கால நிலையை தவிர்க்கசான்றிதழ் கிடைக்கப்பெறாத தேர்வர்களுக்கு சி.இ.ஒ அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களின் மூலம் தகுதித் தேர்விற்கான நுழைவுச்சீட்டினை ஆதாரமாக கொண்டு வருபவர்களுக்கு மட்டும் சான்றிதழ் கிடைக்கபெறும் வண்ணம் ஒரு மாற்று வழி முறையினை டி.ஆர்.பி ஏற்படுத்திட வேண்டும்.அல்லது இரண்டு முறை எனும் கட்டுப்பாட்டைத் தளர்த்திக்கொள்ளலாம். இதற்கான நடவடிக்கையினை உடனடியாக டி.ஆர்.பி மேற்கொள்ளும் என நம்புகிறோம்.
-க. முத்துக்கண்ணன்.
20/2 வ.உ.சி தெரு.,கூடலூர்.
தேனி மாவட்டம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா