Skip to main content

அனைத்து பள்ளிக் கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்

அனைத்து பள்ளிக் கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் - கீழ்கண்ட வகைகளில் கொண்டாடுமாறு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை
நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிக் கூடங்களிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்

பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாட்டில் உள்ள
அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாணவர்களிடையே ஈகை மனப்பான்மையினை உருவாக்குவதற்கும் மாணவர்கள் அன்புடனும், ஆதரவுடனும் கொடுத்து உதவும் மனப்பாங்குடன் சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து பரிசுகளையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதற்கும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் அக்டோபர் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் ‘ மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் ‘ கீழ்கண்ட வகைகளில் கொண்டாடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எழுத படிக்கத்தெரியாதவர்களுக்கு உதவலாம்

1. மாணவர்கள் தங்களின் மனதை கவர்ந்த ஆசிரியர்களின் பணியினை பாராட்டி நன்றி பெருக்கோடு சிறு கட்டுரை வரையலாம்.

2. மாணவர்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் வாழும் இயலாதோர்களுக்கு இயன்ற பரிசுப் பொருட்களை கொடுத்து உதவலாம்.

3. எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கற்றிட உதவலாம்.

5. பயன்தரும் செய்திகளை, படித்தவர்கள் அதனை படிக்காத நண்பர்களும் படித்திட செய்திடலாம்.

6. மாணவர்கள், அரிய நிகழ்ச்சிகள் குறித்து பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதிடச் செய்திடலாம்.

7. மாணவர்கள் தனது சுய முயற்சியில் ஏதாவது ஒரு கைவினைப்பொருட்களை உருவாக்கி மற்றவர்களுக்கு வழங்கிட செய்யலாம்.

8. பயணத்தின் போது மற்றவர்களுக்கு தாம் அமர்ந்து இருக்கும் இருக்கையினை கொடுத்து உதவிடலாம்.

9. பெரியோர்களிடம் தங்களது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் விஷயங்களை கலந்துரையாடலாம்.

சாலையை கடக்க உதவவேண்டும்

10. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் சாலையினை கடப்பதற்கு உதவி செய்யலாம். உதவி செய்வது நல்லது.

11. அருகாமையில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

12. போக்குவரத்து காவலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்.

பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித உறை

13. பாலிதீன் பைகளின் பயன்பாட்டினை குறைப்பதற்கு பழைய காகிதங்களை கொண்டு உறைகள் (கவர்கள்) செய்யலாம்.

14. சின்ன சின்ன பரிசுப் பொருட்களை அருகாமை வீட்டார்களுக்கு கொடுத்து மகிழலாம்.

15. சிறந்த பத்து பொன்மொழிகளை எழுதி பொது இடங்களில் பார்வைக்கு வைக்கலாம்

16. தங்களுக்கு தெரியாத புதிய ஐந்து நபர்களுக்கு புன்னகையுடன் வாழ்த்துச் சொல்லலாம்.

17. முதியவர்களுக்கு தினசரி நாளிதழ்களை வாசித்துக் காட்டலாம்.

18. தங்களது பெற்றோர்களுக்கு அன்றாட வேலைகளில் உதவலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா