Skip to main content

இந்திய ரயில்வேயில் 6101 காலிப்பணியிடங்கள் அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறை ஜூனியர் இன்ஜினீயர், சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட6101 காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது. 
உரிய தகுதியுடையோர் ஆன்லைனில் 20.09.2014 முதல் 19.10.2014 வரை
விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:6101.

வயது:

01.01.2015 அன்று, ஜூனியர் இன்ஜினீயர் பணிக்கு 18-33 வயதுக்குள்ளும், சீனியர் இன்ஜினீயர் பணிக்கு 20-35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வித் தகுதி:

அறிவிக்கையில் வெளியான அட்டவணையில் உள்ள பணிகளுக்கு உரிய கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இன்ஜினீயரிங்கில் பட்டயப் படிப்போ, பட்டப் படிப்போ பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களும் அறிவிக்கையில் வெளியாகியுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள். சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் அதாவது ரூ.50,000க்கு குறைவான ஆண்டுவருமானம் கொண்டோர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிறர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதை ஆன்லைன் பேங்கிங் மூலமாகவோ வங்கி செலான் மூலமாகவோ அஞ்சலகத்திலோ செலுத்தலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜூனியர்இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 14.12.2014 அன்றும் சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு 21.12.2014 அன்றும்நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

உரிய தகுதியுடையோர் ஜூனியர் இன்ஜினீயர் பணிகளுக்கோ சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் பணிகளுக்கோ ஏதாவது ஒரு ஆர்ஆர்பி இணையதளத்தில் (http://www.rrbald.gov.in/ ) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் பிரிண்ட் அவுட்டை ஆர்ஆர்பி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியதில்லை. எழுத்துத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆல்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி நாள்:
விண்ணப்பிக்க கடைசி நாள் 19.10.2014.

கூடுதல் விவரங்களுக்கு:http://www.rrbald.nic.in/

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு