Skip to main content

செவ்வாய் கிரகத்தின் 5 புகைப்படங்களை அனுப்பியது மங்கள்யான்: இஸ்ரோ விஞ்ஞானிகள்

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் 5 புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். செவ்வாய் கிரகத்தையொட்டிய சுற்றுப்பாதைக்குள் விண்கலம் செலுத்தப்பட்ட பிறகு,
அதிலுள்ள மார்ஸ் கலர் கேமரா காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இந்தப் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மங்கள்யானின் வெற்றிக்குப் பிறகு "தினமணி' நிருபரிடம் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது:

விண்கலத்தை செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான கட்டளைகள் ஒவ்வொன்றும் துல்லியமாக செயல்படுத்தப்பட்டன. இதனால், எந்தவிதச் சிக்கலும் இன்றி மங்கள்யான் செவ்வாய் கிரகத்தையொட்டிய சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது.

விண்கலத்திலிருந்து வந்த சிக்னல்கள் ஆஸ்திரேலியாவின் கேன்பெரா, அமெரிக்காவின் கோல்டு ஸ்டோன் ஆகிய இடங்களில் உள்ள தொலை தூர கட்டுப்பாட்டு மையங்களில் பெறப்பட்டன. அதைவைத்தே விண்கலம் திட்டமிட்டப் பாதையில் சென்றது உறுதிசெய்யப்பட்டது. அந்த மையங்களில் சிக்னல்கள் பெறப்பட்ட அந்த நேரத்திலேயே பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையத்துக்கு சிக்னல்கள் அனுப்பப்பட்டன.

விண்கலத்தில் உள்ள மார்ஸ் கலர் கேமரா இயங்கத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களும் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்கள் இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்