Skip to main content

2000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து 2000 பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தும் BFSI துறைகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் அளிக்கவுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து நடத்தும் பட்டதாரி இளைஞர்களுக்கான வங்கித்துறை, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 150 மணி நேர பயிற்சி
வகுப்புகளாக நடைபெறவுள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுவோருக்கு BFSI துறை சார்ந்த வேலைவாய்ப்பு உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இப்பயிற்சி திட்டத்தில் பங்குபெறுவோர் வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த திறன்கள், வாடிக்கையாளர் சேவைத்திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத் திறன்கள் சார்ந்த திறன் மேம்பாட்டைப் பெறுவர்.

2013-2014 ஆம் ஆண்டில் BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.ictact.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 செப்டம்பர் 2014. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பயிற்சிக்கான அனுமதி நடைபெறும்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா