Skip to main content

தமிழக அரசின் சார்பில் 2,000 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி


வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தில் சேர, பட்டதாரி இளைஞர்களிடம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு ஐ.சி.டி., அகாடமி ஆகியவற்றின் சார்பில்,
பட்டதாரி இளைஞர்கள், 2,000 பேருக்கு, வங்கித் துறை, நிதியியல், சேவை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றில், குறுகிய காலத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 150 மணி நேர பயிற்சி வகுப்பாக நடைபெற உள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுவோருக்கு, வேலைவாய்ப்பு உதவி கிடைக்க வாய்ப்புள்ளது.கடந்த ஆண்டு, பி.ஏ., பி.காம், பி.பி.ஏ., பி.பி.எம்., பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., ஆகிய பட்டம் பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர், www.ictat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி