Skip to main content

டிஎன்பிஎஸ்சி: சிவில் நீதிபதி எழுத்துத் தேர்வு நவம்பர் 1-க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் சிவில் நீதிபதி பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள
அறிக்கை:

சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி மொழிபெயர்ப்புத் தாள், தாள் ஒன்று ஆகியவை நவம்பர் 1-ஆம் தேதியும், தாள்-2, தாள்-3 ஆகியவை நவம்பர் 2-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசித் தேதி அக்டோபர் 3-ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்த கடைசி நாள் அக்டோபர் 6-ஆம் தேதி என்றும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வுகள் அக்டோபர் 18, 19 தேதிகளில் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் இப்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்