Skip to main content

1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை
       100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - அரசு முதன்மை செயலாளர் சபிதா
         அரசு முதன்மை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 3 ஆண்டுகளில் 300 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்படும்
ஒவ்வொரு பள்ளிக்கும் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டனஇந்த நிலையை. மாற்றி கூடுதலாக தமிழ், வரலாறு, பொருளாதரம், வணிகவியல் பாடங்களை சேர்த்து 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


         நடப்பாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதனால் ஒவ்வொரு பள்ளிக்கும¢ ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமையாசிரியர்கள், 9 முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் பணியிடங்கள¢ வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என ஆயிரம் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ஸீ31.82 கோடி கூடுதல் செலவாகும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கையில் 1:40 விகிதம் பின்பற்றப்பட வேண்டும். பள்ளிகளின் கூடுதல் கட்டமைப்பு வசதிகளுக்கு எம்.பி., எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் உதவி பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி