Skip to main content

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும் என்று தமிழக அரசின் சிறுபான்மையினர் நல ஆணையர் அ.முகமதுஅஸ்லம் கூறினார்.

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள நெசல் இன்டர்நேஷனல் மகளிர் கல்வியியல் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.

இதில் மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, முகமது அஸ்லம் பேசியதாவது:

மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் காலம் மாறி இந்த காலத்துக்கேற்றவாறு நடைமுறைகளை புரிந்துகொண்டு பாடங்களை படிக்க வேண்டும். பின்னர் மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டும்.

முதலில் பாடங்களைப் படித்து நன்கு புரிந்துகொண்டு பாடம் நடத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்குப் புரிந்து தெளிவாகச் சென்றடையும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு பாடத்தை நடத்த வேண்டும். அதற்காகத்தான் ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வகுப்பறையில் உள்ள மாணவர்களின் குறைபாடுகளைக் கண்டறிந்து சிறந்த கல்வியை தருவது ஆசிரியர்களின் கடமை.

பாடத் திட்டங்கள் அடிக்கடி மாறுகிறது. ஒரு ஆசிரியரின் பணிக் காலம் முடிவதற்குள் 4 முதல் 5 முறை பாடத் திட்டங்கள் மாற வாய்ப்புள்ளது.

ஆகையால், ஆசிரியர்கள் காலத்துக்கேற்றார்போல் தங்களை மாற்றிக்கொண்டு பாடங்களை நடத்தினால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும்.

பாடப் புத்தகங்களில் உள்ள கருத்துகளை மட்டும் கூறாமல் சிந்திக்கும்படி பாடம் நடத்த வேண்டும். 35 வயதுக்குள் அனைவரும் பல்வேறு சாதனைகளை செய்துவிட வேண்டும்.

படிக்கும்போது படிப்புக்கு அடிமையாக இருந்தால்தான் வாழ்நாள் முழுவதும் சுதந்திரமாகச் செயல்பட முடியும். படிக்கும்போது சுதந்திரமாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் வேறு ஒருவருக்கு அடிமையாகத்தான் வாழ முடியும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்றார்.

விழாவுக்கு ஆரணி டிஎஸ்பி என்.மணி தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் எச்.இஸ்மாயில் ஷரீப் வரவேற்றார்.

ராணிப்பேட்டை டிஎஸ்பி சங்கர், ஆரணி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.தனஞ்செழியன், செயலர் எஸ்.ஸ்ரீதர், கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் எஸ்.அப்துல்பக்ஷி, துணைத் தலைவர் ஜெ.குலாம் நபி ஆசாத், பி.ஜாகீர்உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்