Skip to main content

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின சிறப்பு சலுகை


சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 ஜி, 3 ஜி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம்
2 ஜி, 3 ஜி வாடிக்கை யாளர்களுக்கு 14 ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை 90 நாள்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளித்துள்ளது.

அதன்படி ரூ.100, ரூ.150, ரூ. 250 மற்றும் ரூ.350-க்கு செய்யப்படும் ’சி’ டாப் அப்களுக்கு முழு டாக்டைம் வழங்குகிறது.

மேலும், ரூ. 550 மற்றும் ரூ.750- க்கு செய்யப்படும் ’சி’ டாப் அப்களுக்கு முறையே ரூ. 575, ரூ. 790-க்கான டாக் டைம் வழங்குகிறது.ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச கட்டணத்தை விட கூடுதல் டாக்டைம் வழங்கும் சி-டாப் அப் வவுச்சர்களுடைய டாக்டைம் அதிகமாக இருந்தால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அந்த கூடுதல் சலுகைக் கட்டணம் பொருந்தும்

ரூ.561 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 30 முதல் 60 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 5 ஜி.பி. இலவசமாக பயன்படுத்தலாம். மேலும், கூடுதல் டேட்டாபயன்பாட்டுக்கு ஒவ்வொரு 10 கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் ஆகும்.ரூ.821 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 60 முதல் 90 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 7 ஜி.பி. இலவசமாக பயன்படுத்தலாம். கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒவ்வொரு 10 கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் ஆகும். ரூ.1011 சிறப்புக் கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 30 முதல் 90 நாள்களுக்கு நீடிக்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. இலவசமாகப் பெறலாம்.மேலும், கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒவ்வொரு கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் ரூ.1949 சிறப்புக்கட்டண டேட்டா வவுச்சருக்கான வேலிடிட்டி 60 முதல் 90 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 20 ஜி.பி. இலவசமாகப் பெறலாம். கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கு ஒவ்வொரு 10 கே.பி.க்கும் 2 பைசா கட்டணம் ஆகும். இந்த சிறப்பு சலுகை சென்னை உள்பட தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா